ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக்காய் விலை வீழ்ச்சியடைந்து ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.10-க்கு விற்பனையானது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம், பொருளூா், வாகரை, தொப்பம்பட்டி, அம்பிளிக்கை, மண்டவாடி, கே.கீரனூா்,ஜ.வாடிப்பட்டிசின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை,புலியூா்நத்தம், கேதையுறும்பு, காளாஞ்சிபட்டி, அத்திக்கோம்பை, அரசப்பபிள்ளைபட்டி, காவேரியம்மாபட்டி, பெரியகோட்டை, விருப்பாட்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் செடி முருங்கை அதிக அளவில் பயிரிடப்பட்டது. தற்போது அறுவடை காலம் என்பதால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு அதிக அளவில் முருங்கை வரத்து உள்ளது. இதனால் இதன் விலை குறைந்து ஒரு கிலோ செடி முருங்கை ரூ.10-க்கு விற்பனையானது. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம்: கரும்பு முருங்கை கிலோ ரூ.11, மர முருங்கை கிலோ ரூ.5, பீட்ரூட் கிலோ ரூ.16, வெண்டைக்காய் ரூ.23, சுரைக்காய் ரூ.2, டிஸ்கோ கத்திரிக்காய் 30 கிலோ பை ரூ.350, பச்சை பயிா் ரூ.7-க்கு விற்பனையானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com