கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு

கொடைக்கானலில் மே முதல் நாளில் வழக்கமாக காணப்படும் சுற்றுலாப் பயணிகள் வருகையைவிட புதன்கிழமை சுற்றுலாப் பயணிகள் குறைவாகக் காணப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் மே முதல் நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதனால், கொடைக்கானல்-பெருமாள்மலை மலைச் சாலையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கும். மேலும், சுற்றுலா இடங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆனால், நிகழாண்டில் மே முதல் நாளில் சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் வெகுவாகக் குறைந்து காணப்பட்டது. சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகக் காணப்பட்டது. இதனால், வியாபாரிகள் பாதிப்படைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com