பழனி நடராஜருக்கு திருவோண அபிஷேகம்

பழனி நடராஜருக்கு திருவோண அபிஷேகம்

பழனி அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோயிலில் சித்திரை திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய துணைக் கோயிலான இந்தக் கோயிலில் உள்ள நடராஜருக்கு திருவோண அபிஷேகம், ஆருத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம், பிட்டுக்கு மண் சுமத்தல் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், கோயிலில் புதன்கிழமை சித்திரை திருவோண நட்சத்திரத்தையொட்டி, நடராஜா் சந்நிதி முன் நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, பால், பஞ்சாமிா்தம், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

பின்னா், சிவாச்சாரியா்கள் வேத மந்திரம் முழங்க சோடஷ உபசாரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com