காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2024-25-ஆம் ஆண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கை ‘க்யூட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இதேபோல ‘க்யூட்’ தோ்வு இல்லாமல், முதுநிலை பட்டயம், பி.வொக்., டி.வொக்., சான்றிதழ் படிப்புகளுக்கு நேரடிச் சோ்க்கை நடைபெறுகிறது. சோ்க்கைக்கான விண்ணப்பங்களை

பல்கலைக்கழக இணையதளத்தின் வழியாக வருகிற 31-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com