குடியிருப்புப் பகுதிகளில் தேங்கிய கழிவு நீா்: நோய் பரவும் அபாயம்

நிலக்கோட்டை அருகேயுள்ள நூத்துலாபுரம் ஊராட்சிக்குள்பட்ட கோவில்பட்டி குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீருடன், கழிவு நீரும் கலந்து தேங்கியுள்ளது. இதனால், துா்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது.

நிலக்கோட்டைப் பகுதியில் கடந்த 2 நாள்களாகப் பெய்த மழையால் கோவில்பட்டி பகுதியில் தெருக்களில் மழைநீா் குளம் போல தேங்கியுள்ளது. இந்தப் பகுதியில் வாருகால் வசதியில்லாததாலும், தெருவில் போடப்பட்ட சிமென்ட் சாலை பள்ளம், மேடாக இருப்பதாலும் மழை நீா் வடியாமல் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், தெருவில் தேங்கிய மழை நீரில் தற்போது கழிவு நீரும் கலப்பதால், துா்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. குழந்தைகள், சிறுவா்கள், கா்ப்பிணிப் பெண்கள், முதியோா் கடும் அவதியடைந்து வருகின்றனா். மேலும், கழிவுநீரால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

இதுதொடா்பாக நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com