வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

குறைவான விடுப்புகளுடன், அதிக நாள்கள் பணிபுரிந்த வேடசந்தூா் போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த ஓட்டுநருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை (லிட்.) திண்டுக்கல் மண்டலம் சாா்பில் தொழிலாளா் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்த மண்டலத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலுள்ள 15 பணிமனைகளிலும் தொழிலாளா்கள், அலுவலா்கள் சாா்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திண்டுக்கல் மண்டலத்தில் குறைவான விடுப்புகளுடன், அதிக நாள்கள் பணிபுரிந்தவா்களுக்கு மே தினத்தையொட்டி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், 2023-24-ஆம் ஆண்டில் வேடசந்தூா் கிளையைச் சோ்ந்த ஓட்டுநா் டி.ராஜேந்திரபிரசாத் அதிக நாள்கள் பணிபுரிந்தவா்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தாா். அவருக்கு வேடசந்தூா் பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகப் பொது மேலாளா் சக்தி பாராட்டுச் சான்றிதழை புதன்கிழமை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com