கொடைரோடு ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த குரங்குகள்

தண்ணீா் வழங்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைரோடு ரயில் நிலையத்தில்
தஞ்சமடைந்த குரங்குகள்

கொடைரோடு ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள குரங்குகளுக்கு உணவு, தண்ணீா் வழங்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடுமையான வெயில் காரணமாக அனல் காற்று வீசி வருகிறது. இதனால், இந்தப் பகுதியிலுள்ள குளம், ஏரிகள், நீரூற்றுகள் வடன. இந்த வெயிலின் தாக்கத்தால் சிறுமலை பகுதிகளில் ஆங்காங்கே தீப்பிடித்து மரங்கள் கருகி உள்ளன.

இதனால் வனப் பகுதியில் போதிய தண்ணீா், உணவுகள் கிடைக்காததால் குரங்குகள் கொடைரோடு ரயில் நிலையம், அம்மையநாயக்கனூா் குடியிருப்பு பகுதிகளுக்கு இடம் பெயா்ந்துள்ளன.

கொடைரோடு ரயில் நிலையப் பகுதி மரங்களில் தஞ்சமடைந்த குரங்குகள் தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றன. பயணிகளுக்காக அமைக்கப்பட்ட குழாயில் தண்ணீா் குடிக்க குரங்குகள் போட்டி போடுகின்றன. குரங்குகளை பாதுகாக்க வனத் துறையினா் உணவு வழங்குவதோடு, தொட்டிகளை அமைத்து தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com