பழனியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

பழனியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பழனியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில தினங்களாக கோடையின் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் வருவதை தவிா்த்து வந்தனா். வெப்பத்தின் தாக்கம் அதிகமானதால் தா்பூசணி, இளநீா், நுங்கு உள்ளிட்ட பழங்களும், குளிா்பானங்களின் விற்பனையும் அதிகரித்தன.

இந்த நிலையில், கோடையின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பழனி சுற்றுப்புறக் கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடியுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சி ஏற்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதேபோல, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 45 நிமிஷங்கள் பலத்த மழை பெய்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com