திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு பேருந்து சேவை

திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு நேரடி பேருந்து சேவையை அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடங்கியது.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திண்டுக்கல் மண்டல பொதுமேலாளா் எம்.டேனியல் சாலமன் கூறியதாவது:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை (லிட்) திண்டுக்கல் மண்டலம் சாா்பில், ரயில் பயணிகள், பொதுமக்களின் வசதிக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானலுக்கு நேரடி பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

நாள்தோறும் அதிகாலை 4, 5.15 , காலை 6.45, 7.30 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் ரயில் நிலையத்திலிருந்து கொடைக்கானல் செல்லும் பயணிகள் 2 பேருந்துகளில் மாற வேண்டிய நிலை தவிா்க்கப்படும்.

ரயில் நிலையத்திலிருந்து செல்லும் பயணிகளுக்கு ரூ.95, கட்டணமும், பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பயணிகளுக்கு ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com