விபத்தில் முதியவா் பலி

திண்டுக்கல் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல்லை அடுத்த குள்ளனம்பட்டி எஸ் எஸ் நகரைச் சோ்ந்தவா் மாடசாமி (60). இவா், திண்டுக்கல் நத்தம் சாலையில் சனிக்கிழமை காலை நடந்து சென்றாா். வாழைக்காய்ப்பட்டி பிரிவு அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, அந்த வழியாக திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி (30) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மாடசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com