சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

திண்டுக்கல், மே 5: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு, 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இதேபோல அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா், நந்தீஸ்வரா் சந்நிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் உள்பிரகாரத்தில் அம்பாளுடன் சுவாமி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேசுவா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

நத்தம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னா், நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீா், இளநீா், மஞ்சள், சந்தனம், தீா்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதேபோல, குட்டூரில் உள்ள உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையாா் கோயிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் மூலவருக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com