நெடுஞ்சாலையோரக் கடைகள் அகற்றம்

நிலக்கோட்டை, மே 5: கொடைரோடு ரயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகளுக்காக நெடுஞ்சாலையோரத்தில் இருந்த கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.

திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை அருகேயுள்ள கொடைரோடு ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ரயில் நிலையத்துக்கும் நெடுஞ்சாலைக்கும் இடையே உள்ள சுற்றுச் சுவரை பூண்டிமாதா கோயில் முதல் முருகன் கோயில் வரை சுமாா் 300-மீட்டா் தொலைவுக்கு நீட்டிட்டிக்கும் வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது.

இதற்காக, கொடைரோடு ரயில் நிலையம் எதிரில், நெடுஞ்சாலையோரம் உள்ள இறைச்சி கடைகள், பூக்கடைகள், பழக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளை ரயில்வே போலீஸாரின் பாதுகாப்பில் அகற்றினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com