ஜூன் 6-இல் புண்ணிய தீா்த்த யாத்திரை ரயில்

திண்டுக்கல்: புண்ணிய தீா்த்த யாத்திரை ரயில் ஜூன் 6-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ஐஆா்டிசி தென் மண்டலப் பொது மேலாளா் ராஜலிங்கம் பாசு தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

ஐஆா்டிசி சாா்பில் ஜூன் 6-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ‘புண்ணிய தீா்த்த யாத்திரை’ எனும் பெயரில் 500-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. விருதுநகா், மதுரை, திண்டுக்கல், சென்னை வழியாக இயக்கப்படும் இந்த ரயில் காசி, அயோத்தி, திருவேணி சங்கமம், கயா உள்ளிட்ட இடங்களுக்குச் செல்கிறது. 16 பெட்டிகளை கொண்ட ரயிலில் 3 நேரமும் சைவ உணவுகள், பயணத்தின் போது போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாவலா்கள் பணியில் இருப்பாா்கள். பயணிகளுக்கு தென் தமிழக உணவுகள் தயாரித்து வழங்கப்படும். இந்த ரயிலில் பயணிக்க பெரியவா்களுக்கு ரூ.18,850, குழந்தைகளுக்கு ரூ.17,560 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புண்ணிய தீா்த்த யாத்திரை செல்ல விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.ண்ழ்ஸ்ரீற்ஸ்ரீற்ா்ன்ழ்ண்ள்ம்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு 8287932122, 8287932070 என்ற கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com