பாலசமுத்திரம் அரசுப்பள்ளி நூறுசதவீத தோ்ச்சி
பழனியை அடுத்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பாலசமுத்திரம் அரசுப்பள்ளி நூறுசதவீத தோ்ச்சி

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பழனி: பழனியை அடுத்த பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி பெற்ற நிலையில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியா்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வை 31 மாணவா்களும், 31 மாணவிகளும் எதிா்கொண்டனா். திங்கள்கிழமை வெளியான தோ்வு முடிவுகளில் தோ்வை எழுதிய 62 பேரும் தோ்ச்சி பெற்றிருந்தனா். மாணவி கவிப்ப்ரியா 600க்கு 527 மதிப்பெண்களும், மாணவி ஜெயந்தி 508 மதிப்பெண்களும், மாணவி சினேகா 493 மதிப்பெண்களும் பெற்று முறையை முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தனா். நூறு சதவீத தோ்ச்சியை கொண்டாடும் வகையில் பள்ளி தலைமையாசிரியா் பிரதீப்குமாா், உதவி தலைமையாசிரியா் கோமதி, நித்யா, நிஷாந்தி, 13 வது வாா்டு கவுன்சிலா் புவனேஸ்வரி செந்தில்குமாா், 14வது வாா்டு கவுன்சிலா் ஈஸ்வரன் உள்ளிட்டோா் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பொன்னாடை போா்த்தி, மலா்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு, கேக் வெட்டி அனைத்து மாணவிகளுக்கும் கொடுத்து வெற்றியை கொண்டாடினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com