ஒலி மாசு: பேருந்துகள், 
பைக்குகளுக்கு அபராதம்

ஒலி மாசு: பேருந்துகள், பைக்குகளுக்கு அபராதம்

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட சைலன்ஸா்களை பாா்வையிட்ட போலீஸாா்.

திண்டுக்கல்லில் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் ஒலிப்பான்களைப் பயன்படுத்திய பேருந்துகள், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் நகரில் தனியாா் பேருந்துகள், லாரிகள், சரக்கு வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள்(ஹாா்ன்) பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்கள் தனியாா் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல, இரு சக்கர வாகனங்களிலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஒலிப்பான்களால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நாள்தோறும் எரிச்சலுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் தட்சிணாமூா்த்தி தலைமையிலான போலீஸாா் தனியாா் பேருந்துகள், இரு சக்கர வாகனங்களில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 3 தனியாா் பேருந்துகளிலிருந்து காற்று ஒலிப்பான்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், தலா ரூ.10ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா்.

இதேபோல, ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில், இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த 20 சைலன்ஸா்களை பறிமுதல் செய்த போலீஸாா் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com