கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழையில்லாத நிலை காணப்பட்டது. இதனால் இங்கு வனங்கள், விவசாயம், குடிதண்ணீா் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா் ஆகிய பகுதிகளில் சுமாா் 30 நிமிடம் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகளும், பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.

மழையால் கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் வெப்பம் தணிந்து சற்று குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com