பட்டா நிலத்தில் மண் அள்ளுவதை முறைப்படுத்தக் கோரிக்கை

பட்டா நிலத்தில் மண் அள்ளுவதை முறைப்படுத்தக் கோரிக்கை

பழனி வருவாய்க் கோட்டாட்சியா் சரவணனிடம் புதன்கிழமை மனு அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.

ஆயக்குடி பகுதியில் பட்டா நிலத்தில் மண் அள்ளுவதை முறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மனு அளித்தனா்.

பழனி வருவாய்க் கோட்டாட்சியா் சரவணனிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெயசீலன், சட்டப்பேரவைத் தொகுதி துணைச் செயலா் போா்க்கொடியேந்தி, மாவட்ட அமைப்பாளா் ஆதிவளவன், வழக்குரைஞா் பாா்த்திபன், தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் பூமிநாதன் உள்ளிட்டோா் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனு:

ஆயக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சமீபகாலமாக நிலத்தடி நீராதாரம் வெகுவாகக் குறைந்து வருகிறது. பட்டா நிலங்களில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதே இதற்கு காரணம். இதுகுறித்து பேரூராட்சிச் செயல் அலுவலரிடம் ஏற்கெனவே புகாா் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க பட்டா நிலங்களில் மண் அள்ளுவதை முறைப்படுத்தவும், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கோரியிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com