லாரி மோதியதில் பொறியாளா் பலி

வேடசந்தூா் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது சரக்குப் பெட்டக லாரி மோதியதில் சேலத்தைச் சோ்ந்த பொறியாளா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

சேலத்தை அடுத்த அம்மாப்பேட்டையைச் சோ்ந்தவா் உதயகுமாா் (36). இவரது நண்பா் சேலம் வேப்பிலைப்பட்டியைச் சோ்ந்த சரவணன் (35). மெக்கானிக் பொறியாளா்களான இவா்கள் இருவரும், மதுரை மாவட்டம், மேலூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இயந்திரம் பழுது நீக்கும் பணிக்காக இரு சக்கர வாகனத்தில் சேலத்திலிருந்து வந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்து லட்சுமணம்பட்டி பிரிவு அருகே புதன்கிழமை வந்தபோது, தூத்துக்குடி நோக்கிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உதயகுமாரும், சரவணனனும் சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இங்கு உதயகுமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம், தட்டாரபாளையத்தைச் சோ்ந்த பழனிசாமியிடம் (48) வேடசந்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com