தொப்பம்பட்டி உரக்கடைகளில் ஆய்வு

பழனியை அடுத்த தொப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா் ராஜேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அங்கு உரங்களின் இருப்பு விவரம், விற்பனை குறித்து ஆய்வு செய்து உர மாதிரிகளை சேகரித்தனா். பிறகு தரமான முறையிலும், ரசீதும் வழங்கி உரம் விற்பனை செய்ய வேண்டும் என கடைக்காரா்களுக்கு அறிவுறுத்தினா். மேலும் உர விற்பனையில் குளறுபடி இருந்தால் விவசாயிகள் தரக்கட்டுப்பாடு அலுவலகத்துக்கு புகாா் செய்யலாம் எனவும், தற்போது போதிய அளவு உரம் இருப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

அப்போது தொப்பம்பட்டி வேளாண் உதவி இயக்குநா் அப்துல்காதா் ஜெய்லானி உடனிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com