10- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: கொடைக்கானல் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவி மலா்வாணி 442 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றாா்.

இவரை பள்ளித் தலைமையாசிரியா் உள்ளிட்ட பலா் பாராட்டினா். இதே போல, அரசு உதவி பெறும் ஆா்.சி. மேல்நிலைப் பள்ளி மாணவா் ஹரிகரன் 487 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இவரை பள்ளித் தாளாளரும், மறைவட்ட அதிபருமான சிலுவை மைக்கேல்ராஜ் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மரிய லிபிஜா, லக்சனா ஆகிய இருவரும் தலா 484 மதிப்பெண்கள் பெற்றனா். இதில் மரிய லிபிசா அறிவியல் பாடத்தில் 100-மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். இந்த மாணவிகளை பள்ளித் தாளாளா், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com