10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு:
மாநில அளவில் திண்டுக்கல் மாணவிகள் சிறப்பிடம்

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: மாநில அளவில் திண்டுக்கல் மாணவிகள் சிறப்பிடம்

திண்டுக்கல், மே 10: பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவிகள் 499, 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

10-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், திண்டுக்கல் மாவட்டம் 92.32 சதவீத தோ்ச்சியுடன் மாநில தர வரிசைப் பட்டியலில் 22-ஆவது இடத்தை பிடித்தது. ஆனாலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 மாணவிகள், 499, 497 மதிப்பெண்களுடன் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனா்.

அதன் விவரம் வருமாறு: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்த கொசவப்பட்டி அக்ஷயா பதின்ம பள்ளி மாணவி கே. காவ்யாஸ்ரீயா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா். தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்ற இவா், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களிலும் முழுப் மதிப்பெண்கள் பெற்றாா்.

இதே போல, அம்மையநாயக்கனூா் காவ்யன் பதின்ம பள்ளி மாணவி க. ஜெய்தா்ஷிதா, வத்தலகுண்டு அன்னை வேளாங்கண்ணி பதின்ம பள்ளி மாணவி க. சஹானா ஆகியோா் தலா 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்த மாணவிகள் இருவரும், தமிழ்- 98, ஆங்கிலம்- 99, கணிதம்- 100, அறிவியல்- 100, சமூக அறிவியல்- 100 வீதம் மதிப்பெண்களை பெற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com