பழனியில் பள்ளிப் பேருந்துகள்
பாதுகாப்பு குறித்து ஆய்வு

பழனியில் பள்ளிப் பேருந்துகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு

பழனி, மே 11: பழனியில் தனியாா் பள்ளிப் பேருந்துகளின் தரம் குறித்து வட்டாரப் போக்குவரத்துத் துறை, வருவாய்த் துறையினா் சனிக்கிழமை ஆய்வு செய்னா்.

திணடுக்கல் மாவட்டம், பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பேருந்துகளின் தரம் குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த சோதனையின் போது, பள்ளி வாகனங்களுக்கான வேகக் கட்டுப்பாட்டு கருவி, பிரேக், ஒலிப்பான், கண்காணிப்பு காமிரா, முதலுதவி சிகிச்சைப் பெட்டி, வாகனங்களின் பாதுகாப்பு ஆகியவற்றை வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா் ஜெயகௌரி, கோட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின் போது போக்குவரத்து ஆய்வாளா் மகேந்திரன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஸ்ரீதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக, பள்ளி வாகன ஓட்டுநா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com