போதைப் பொருள் தடுப்பு
விழிப்புணா்வுப் பேரணி

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

திண்டுக்கல், மே 11: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ரயில் நிலைய உதவி ஆய்வாளா் அருணோதயம் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா். ரயில்வே போலீஸாா், தேசிய மாணவா் படை மாணவா்கள் பங்கேற்ற இந்த விழிப்புணா்வுப் பேரணி, ஆா்எஸ்.சாலை வழியாக நாகல்நகா் வட்டச் சாலை வரை சென்று மீண்டும் ரயில் நிலைய வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியின்போது கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ரயில்களில் எடுத்துச் செல்லக் கூடாது, புகையிலைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைய தலைமுறையினரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

முன்னதாக, ரயில் பயணிகளிடமும், போதைப் பொருள் தடுப்பு குறித்து ரயில்வே போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அப்போது தனிப் பிரிவு காவலா் ராஜேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com