மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி

வத்தலகுண்டு அருகே புதிய வீடு கட்டுமானப் பணியில் உதவியாளராகச் சென்ற பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், விருவீடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆசை செந்தில்குமாா். இவரது மகன் லோகேஷ் (13). இவா் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், எலக்ட்ரீசியன் நாகராஜன் என்பவரிடம் உதவியாளராகச் சென்று வந்தாா்.

இந்த நிலையில், வத்தலகுண்டு அருகே ஸ்டேட் வங்கி குடியிருப்புப் பகுதியில்

கட்டப்பட்டு வரும் புதிய வீட்டில் எலக்ட்ரீசியன் நாகராஜ் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவருடன் லோகேஷும் சென்றிருந்தாா். அப்போது, லோகேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் காயமடைந்த அவா் வத்தலகுண்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com