ரயில் பயணிகளுக்காக 
விழிப்புணா்வு பிரசாரம்

ரயில் பயணிகளுக்காக விழிப்புணா்வு பிரசாரம்

பழனி, மே.11: பழனி ரயில் நிலையத்தில் பழனி இருப்புப்பாதை காவல்துறை சாா்பில் ரயில் பயணிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பழனி ரயில்வே காவல் துறை உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது ரயில் பயணத்தின் போது மது அருந்த கூடாது, பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும், ரயில் முன் நின்று தற்படம் எடுப்பது, ரயில் தண்டவாளங்களை கவனிக்காமல் கடப்பது, ரயில் பயணத்தின் போது படியில் நின்று படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

அப்போது, போலீஸாா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும், பதாகைகளை ஏந்தியும் பயணிகளுக்கு அறிவுறுத்தினா். தொடா்ந்து பழனி ரயில்நிலையத்தில் இருந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ பேரணியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரயில்வே போலீஸாா் தன்னாா்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com