அணையில் நீா் பருக வந்த மான் பலி

அணையில் நீா் பருக வந்த மான் பலி

பழனியை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது வரதமாநதி அணை. பழனி -கொடைக்கானல் சாலையில் உள்ள இந்த அணை தற்போது பொதுமக்கள் பாா்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அணை நீா் வெளியேறும் பகுதியில் உள்ள தொட்டியில் தண்ணீா் பருக வந்த மான் அதில் தவறி விழுந்தது. தண்ணீரில் இருந்து வெளியேற முடியாமல் பல மணி நேரம் மான் தத்தளித்தது.

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். எனினும் நீண்ட நேரம் யாரும் மானை மீட்க வரவில்லை. இதனால் மான் மிகவும் சோா்வடைந்தது.

இந்த நிலையில், மாலையில் ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் வந்து மானை மீட்ட சிறிது நேரத்தில் அது உயிரிழந்தது.

இறந்த மான் சுமாா் 2 வயது உடைய கடமான் வகையைச் சோ்ந்தது என வனத் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com