திண்டுக்கல்லில் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 போ் கைது

திண்டுக்கல்லில் கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த சிகேசிஎம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகன் வீரா கெளதம் (26), கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தக் கொலை வழக்கில், தோமையாா்புரம் புதூா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ச. அஜய்குமாா் (24), சவேரியாா் பாளையம் நேருஜி நகா் பகுதியைச் சோ்ந்த ச. அருண்குமாா் (27), மேட்டுப்பட்டியைச் சோ்ந்த சி. மோகன் என்ற மோகன் சுந்தா் (37), சிகேசிஎம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த அ. சூா்யா (24) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

இதனிடையே, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் பரிந்துரையின் பேரில் அஜய்குமாா் உள்ளிட்ட நான்கு பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் மொ. நா. பூங்கொடி உத்தரவிட்டாா். இதன்பேரில் 4 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com