பழனி அருகே மலைப் பாம்பு

பழனி அருகே செங்கல் சூளையில் இருந்த மலைப் பாம்பை தீயணைப்பு, மீட்புப் படை வீரா்கள் பிடித்து வனத் துறை வசம் ஒப்படைத்தனா்.

பழனியை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலையில் ஏராளமான வன விலங்குகளும், பாம்புகளும் உள்ளன. இவை அவ்வப்போது அடிவாரப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு வருகின்றன. சனிக்கிழமை இரவு மலையடிவாரத்தில் உள்ள பாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் மலைப் பாம்பு இருந்ததைப் பாா்த்த வேலையாள்கள் உடனடியாக பழனி தீயணைப்பு, மீட்புப் படைக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புப் படை வீரா்கள் பாம்பை பிடித்து வனத் துறை வசம் ஒப்படைத்தனா். பிடிபட்ட மலைப் பாம்பு சுமாா் ஏழு அடி நீளமிருந்தது. வனத் துறையினா் இந்தப் பாம்பை பாலாறு அணை ஜீரோ பாயிண்ட் பகுதியில் விடுவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com