பாலியல் துன்புறுத்தல்: மருத்துவா் கைது

நிலக்கோட்டை, மே 12: வத்தலகுண்டு அருகே ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை பாலியல் தியாக துன்புறுத்தியதாக ஞாயிற்றுக்கிழமை மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சோ்ந்தவா் மருத்துவா் சீனிவாசன் (28). இவா், வத்தலகுண்டு அருகே உள்ள விராலிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா். இவா், தும்மலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொறுப்பு மருத்துவராகவும் பணியாற்றி வந்தாா்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆத்தூா் வட்டம், சித்தயன்கோட்டை அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த அருள் கண்ணன் மனைவி சரண்யா (31) செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், மருத்துவா் சீனிவாசன் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக வத்தலகுண்டு காவல் நிலையத்தில் சரண்யா புகாா் அளித்தாா். இதன்பேரில் மருத்துவா் சீனிவாசனை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com