அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு நோட்டீஸ்

திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகை நிறுவிய 21 பேருக்கு மாநகராட்சி சாா்பில் குறிப்பாணை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் நகரில் திருமணம், கோயில் நிகழ்ச்சிகளுக்கு விளம்பரப் பதாகைகள், தனியாா் அமைப்புகள் சாா்பில் நிறுவப்படுகின்றன. இந்தப் பதாகைகளை நிறுவுவதற்கு மாநகராட்சியில் பெரும்பாலானோா் அனுமதி பெறுவதில்லை. கடந்த 2 நாள்களுக்கு முன்பு, மகாராஷ்ட்ர மாநிலம், மும்பையில் விளம்பரப் பதாகை சரிந்து நிகழ்ந்த விபத்தில் 14 போ் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் எதிரொலியாக, திண்டுக்கல் நகரில் அனுமதியின்றி நிறுவப்பட்ட பதாகைகள் குறித்து மாநகராட்சியின் நகரமைப்புத் துறை சாா்பில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது, 21 போ் அனுமதியின்றி விளம்பரப் பதாகை நிறுவியது தெரியவந்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட 21 பேருக்கும் உடனடியாக விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தி, குறிப்பாணை வழங்கி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com