கொடைக்கானலில் மலா்ச் செடிகளுக்கு நெகிழிப் பைகள் பாதுகாப்பு

கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், மலா்ச் செடிகளுக்கு நெகிழிப் பைகள் பாதுகாப்பு போடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வரும் வெள்ளிக்கிழமை (மே 17) மலா்க் கண்காட்சி, கோடை விழா தொடங்கவுள்ளது. இதையொட்டி, பிரையண்ட் பூங்காவில் பேன்சி, டைந்தேஸ், ஆந்தோரியம், ஜொ்னி, கிங் ஆஸ்டா் உள்ளிட்ட 25 வகைகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது வண்ண வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால், கடந்த ஒருவாரமாக தொடா்ந்து பெய்துவரும் மழையால், மலா்ச் செடிகள் சேதமடைவதைத் தடுக்கும் வகையில், நெகிழிப் பைகள் மூலம் அவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com