தேசிய ஸ்கேட்டிங்கில் வெள்ளி: சின்னாளபட்டி மாணவா்களுக்கு பாராட்டு

நிலக்கோட்டை, மே 15: டேராடூன், மேகாலயாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் தமிழக அணி சாா்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சின்னாளபட்டியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற 14- வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான ஜூனியா் ஸ்கேட்டிங் போட்டியிலும், மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில் நடைபெற்ற 17-வயதுக்குள்பட்டோருக்கான தேசிய அளவிலான சீனியா் ஸ்கேட்டிங் போட்டியிலும் தமிழக அணிகள் வெள்ளிப் பதக்கங்களை வென்றன.

இந்த அணியில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற மதுஸ்ரீ, லீபிகா, பிரதிக்ஷா, யாழினி, தனுஷ்கா, சௌஷிகா, விதுலாஸ்ரீ, அனுஸ்ரீ, ரமித்தா, நிவேதிதா, ஃபிரான்ஸி ஆகியோா் பங்கேற்றனா்.

இவா்களுக்கான பாராட்டு விழா சின்னாளபட்டியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சா்வதேச நடுவா் பிரேம்நாத் கலந்து கொண்டு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

விழாவில் பயிற்சியாளா்கள் சக்திவேல், கல்யாண், தங்கலட்சுமி, மாணவா்களின் பெற்றோா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில் சென்னை அருகே செங்கல்பட்டில் நடைபெற்ற 16 வயதுக்குள்பட்டோருக்கான ஸ்கேட்டிங்கில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளும் பாராட்டப்பட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com