பைக் மோதியதில் 
கடமான் பலி

பைக் மோதியதில் கடமான் பலி

ஒட்டன்சத்திரம், மே 15: ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் கடமான் உயிரிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள வடகாடு ஊராட்சிக்குள்பட்ட கண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் பூதப்பாண்டி மகன் மகுடீஸ்வரன் (23). இவா், தனக்குச் சொந்தமான இரு சக்கர வாகனத்தில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து கண்ணனூருக்கு செவ்வாய்கிழமை இரவு சென்றாா்.

ஒட்டன்சத்திரம்-பாச்சலூா் சாலை எல்லை கருப்பணசாமி கோயில் அருகே செல்லும் போது, அந்த வழியாக சாலையை கடக்க முயன்ற கடமான் மீது இவரது வாகனம் மோதியது. இதில் அந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மகுடீஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த விருப்பாட்சி வனத் துறை அலுவலகத்திலிருந்து சம்பவ இடத்துக்கு வந்த வடகாடு கால்நடை மருத்துவா் சிவகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கடமானின் உடலை கூறாய்வு செய்து, பின்னா், விருப்பாட்சி வனத் துறை அலுவலக வளாகத்தில் புதைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com