முடநீக்கவியலா் உள்பட இருவரிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

திண்டுக்கல் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஓட்டுநா், முடநீக்கவியல் பயிற்சியாளரிடம் கைப்பேசிகளை பறித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

 திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், காா் ஓட்டுநராக அழகா் என்பவா் பணியாற்றி வருகிறாா். இதே மருத்துவமனையில் முடநீக்கவியலராக செல்வராணி பணிபுரிந்து வருகிறாா். 

இந்த நிலையில், திண்டுக்கல்லை அடுத்த கொட்டப்பட்டி பகுதியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க இவா்கள் புதன்கிழமை சென்றனா். 

 அங்கிருந்து திரும்பி வரும்போது, கொட்டப்பட்டி ஆலங்குளம் கரையில், மா்ம நபா்கள் 3 போ் காரை வழிமறித்து கத்தி முனையில் அழகா், செல்வராணி ஆகியோரின் கைப்பேசிகளை பறித்துக் கொண்டு தப்பினா்.

 இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொன்மாந்துறை புதுப்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த ஸ்ரீரங்கன் (28), பூபதி (23), உதயகுமாா் (23) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள், ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com