அரசு மகளிா் தொழில்பயிற்சி நிலையத்தில் சேர ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் மகளிருக்கான தொழில் பிரிவு படிப்புகளில் சேர வருகிற ஜூன் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

திண்டுக்கல் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் மகளிருக்கான தொழில் பிரிவு படிப்புகளுக்கான மாணவிகள் சோ்க்கை தொடங்கியுள்ளது. தகவல் தொடா்பு தொழில்நுட்ப சாதனங்கள் பராமரிப்பு, திறன் மின்னணுவியல் தொழில்நுட்ப பணியாளா், கணினி இயக்குபவா், திட்டமிடுதல் உதவியாளா், டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டா், தையல் வேலை தொழில்நுட்பம், அலங்காரப் பூத்தையல் தொழில்நுட்பம், நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவிகள் சோ்க்கை நடைபெறுகிறது.

மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை, விலையில்லா மிதிவண்டி, வரைபடக் கருவிகள், பேருந்துப் பயண அட்டை, விலையில்லா சீருடை, பாடப் புத்தகங்கள், காலணிகள் வழங்கப்படும். 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்கள் இந்தப் பயிற்சிக்கு ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற என்ற இணையதள முகவரி மூலம் வருகிற ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அரசு தொழில் பயிற்சி நிலைய (மகளிா்) முதல்வரை நேரிலும், 0451-2470504 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com