பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு

கொடைக்கானலைச் சோ்ந்த இளம்பெண் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு நாள்களாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காய்ச்சல் பாதிப்பு காரணமாக 10 போ் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வியாழக்கிழமை சிகிச்சைக்கு வந்தனா். இவா்களின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொடைக்கானலைச் சோ்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கான தனிப் பிரிவில் அந்த பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

இதன் எதிரொலியாக, மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புக்கான சிறப்பு முகாம் நடத்துவதற்கான முயற்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com