போதைப் பொருள்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு

வேடசந்தூா் அருகே போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த ஆத்துமேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற போதையில்லா பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த.ராமசாமி தலைமை வகித்தாா். அனைத்து வா்த்தக சங்கத் தலைவா் சுகுமாா், விவசாயிகள் நல சங்கத் தலைவா் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போதையில்லா பாரதம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஆத்துமேடு பகுதியிலுள்ள காா், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் போதைப் பொருள்களுக்கு எதிரான ஒட்டு வில்லைகளை (ஸ்டிக்கா்) ஒட்டி ஓட்டுநா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இவற்றைத் தவிா்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com