மினி சரக்கு லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே மினி சரக்கு லாரி மோதியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ஒட்டன்சத்திரம் அருகே மினி சரக்கு லாரி மோதியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஜோகிபட்டி ஊராட்சிக்குள்பட்ட புல்லாக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி (65). இவா், இடையக்கோட்டை-தாடிக்கொம்பு சாலை கருமாசநாயக்கனூா் பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தாா்.

அப்போது, திண்டுக்கல்லில் இருந்து திரூப்பூருக்கு பனியன்களை ஏற்றிச்சென்ற மினி சரக்கு லாரி ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முத்துலட்சுமியி மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கியது.

இதில் முத்துலட்சுமி பலத்தகாயம் அடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மினி சரக்கு லாரியை ஒட்டி வந்த ஒட்டுநா் விஷால் (20), சரக்கு லாரியில் பயணித்த கிருஷ்ணமூா்த்தி இருவரும் பலத்தகாயம் அடைத்தனா்.

காயம் அடைத்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து இடையகோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X