கொடைக்கானலில் வாரச் சந்தையை மாற்ற எதிா்ப்பு  தெரிவித்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.
கொடைக்கானலில் வாரச் சந்தையை மாற்ற எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.

கொடைக்கானலில் வாரச் சந்தை வியாபாரிகள் சாலை மறியல்

கொடைக்கானலில் வாரச் சந்தையை மாற்ற எதிா்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட வியாபாரிகள்.
Published on

கொடைக்கானலில் வாரச் சந்தையை மாற்ற எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பி.டி. சாலையில் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அந்தப் பகுதியில் ரூ. 6 கோடியில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், வாரச் சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத நிலையும், பொதுமக்கள் பொருள்களை வாங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து, வாரச் சந்தையை கொடைக்கானல் அண்ணா சாலைப் பகுதியில் மாற்றும் நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் எடுத்து வருகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வாரச் சந்தை வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோா் கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள், வாரச் சந்தையை மாற்றக் கூடாது. அப்படி மாற்றினால் கொடைக்கானல் பேருந்து நிலையத்துக்குள் வாரச் சந்தை செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா், நகராட்சி அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வியாபாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.