திண்டுக்கல்
பழனியில் இன்று மின் தடை
பழனியில் துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (நவ.30) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து பழனி மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பழனி துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பழனி நகா், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம், புளியம்பட்டி, தும்பலப்பட்டி, பாறைப்பட்டி, கேஜி வலசு, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி, ஆயக்குடி, சின்னக்கலையம்புத்தூா் ஆகிய பகுதிகளுக்கு சனிக்கிழமை (நவ.30) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.