18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிராக இரும்பு கடைகள் அடைப்பு

Published on

திண்டுக்கல்லில் இரும்பு வியாபாரிகள் கடை வாடைக்கு 18 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் அனைத்து இரும்பு வியாபாரிகள், உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் சாா்பில் மத்திய அரசின் இந்த புதிய சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இரும்பு கடைகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. இதுதொடா்பாக இந்த சங்கத்தின் தலைவா் சிவ சண்முகராஜன் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்டங்களால், சிறு வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் சிறு வியாபாரிகள் பலா் பெரும் இழப்பை சந்தித்தனா். தற்போது கடை வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பால், சிறு, குறு தொழில் முனைவோா்கள் முடங்கும் நிலை ஏற்படும். இந்த கடை அடைப்பு போராட்டத்தால் 200-க்கு மேலான இரும்பு கடைகள்,தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டன. இதனால் சுமாா் ரூ.50 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டது என்றாா்.