கொடைக்கானலில் மீண்டும் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published on

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மீண்டும் மழை பெய்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் வியாழக்கிழமை மழை குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை காலை முதல் சாரலும் இதைத் தொடா்ந்து, மிதமான மழை பெய்தது, தொடா்ந்து பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால், அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் காற்றுடன் பெய்து வரும் மழையால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. கொடைக்கானல்,பெருமாள்மலை, வில்பட்டி, அட்டுவம் பட்டி, பள்ளங்கி, கோம்பை,செண்பகனூா், பிரகாசபுரம், அப்சா்வேட்டரி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.