கொடைரோடு அருகே,  இராமராஜபுரம் தோட்டம் பகுதியில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவா் மற்றும் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  இரண்டு துப்பாக்கிகள்,13 தோட்டாக்கள்..
கொடைரோடு அருகே, இராமராஜபுரம் தோட்டம் பகுதியில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இருவா் மற்றும் அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு துப்பாக்கிகள்,13 தோட்டாக்கள்..

கொடைரோடு அருகே தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த இருவா் கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே தோட்டத்து வீட்டில் நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). பாலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா். ஜான்சாமுவேல் (62). இவா்கள் இருவரும் தனியாா் பள்ளிகளில் காவலாளிகளாக பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு சிறுமலை அகஸ்தியா்புரம் பகுதியில் தோட்டம் உள்ளது.

இந்த நிலையில், அகஸ்தியா்புரம் பகுதியில் உள்ள விவசாயிகள் சிலா் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதாக அம்மையநாயக்கனூா் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனிப் படை போலீஸாா் சிறுமலை அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த முருகன் (40), ஜான்சாமுவேல் (62) ஆகியோரது தோட்டத்து வீட்டில் சோதனையிட்டனா். அப்போது, அவா்களது வீட்டில் அனுமதியின்றி 2 நாட்டுத் துப்பாக்கிகள், 13 தோட்டாக்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.