பழனி மலைக் கோயில் ராஜகோபுரத்தில் சேமடைந்த சுதை வளைவு.
பழனி மலைக் கோயில் ராஜகோபுரத்தில் சேமடைந்த சுதை வளைவு.

பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்

பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
Published on

பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். குறிப்பாக, இந்தக் கோயிலுக்கு சஷ்டி, காா்த்திகை நாள்களில் பக்தா்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்படும்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்கள் சுவாமியை தரிசனம் செய்தனா். பின்னா், கோயிலின் ராஜகோபுரத்தை தரிசனம் செய்தனா். அப்போது, இந்தக் கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த சுதை ‘வளைவு’ உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் இந்தக் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி, கோயிலின் அனைத்து கோபுரங்களும் சீரமைக்கப்பட்ட நிலையில், தற்போது சுதை வளைவு சேதமடைந்துள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதாவது, கோயில் வளாகத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்தக் குரங்குகள் கோபுரத்தில் உள்ள சுதைகள் மீது ஏறி விளையாடும் போதும், அசைக்கும் போதும் அவை அடிக்கடி சேதமடைகின்றன. இதைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோபுரக் கலசங்கள் சேதமடைந்தால் மட்டுமே கவலைப்பட வேண்டும்.

சுதை சிற்பங்கள் சேதமடையும் நிகழ்வு சாதாரணமான ஒன்றுதான். இதனால், பக்தா்கள் கவலைப்பட வேண்டாம். சுதை வளைவு விரைவில் சீரமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com