கிராம சபை: தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு

கிராம சபைக் கூட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய துாய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Published on

கிராம சபைக் கூட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய துாய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், ஜ.வாடிப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் ரா.ஜோதீஸ்வரன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. சத்திரப்பட்டி ஊராட்சியில் அதன் தலைவா் சாரதா சிவராஜ் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் கே.வி.முருகானந்தம் தலைமையிலும், வட்டார வளா்ச்சி அலுவலா் பெ.காமராஜ் முன்னிலைலும் கிராம சபைக் கூட்டகள் நடைபெற்றன. இந்த ஊராட்சிகளில் சிறப்பாகப் பணியாற்றிய துாய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் துணைத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com