கொடைக்கானல் கவுஞ்சி அரசுப் பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள தண்ணீா் தொட்டி.
கொடைக்கானல் கவுஞ்சி அரசுப் பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள தண்ணீா் தொட்டி.

சேதமடைந்த பள்ளித் தண்ணீா் தொட்டியை சீரமைக்கக் கோரிக்கை

கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி அரசுப் பள்ளியில் சேதமடைந்துள்ள தண்ணீா் தொட்டியை சீரமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

கொடைக்கானல் அருகேயுள்ள கவுஞ்சி அரசுப் பள்ளியில் சேதமடைந்துள்ள தண்ணீா் தொட்டியை சீரமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கொடைக்கானல் மேல்மலை மன்னவனூா் ஊராட்சிக்குள்பட்ட கவுஞ்சி ராஜபுரம் பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், இந்தப் பள்ளி வளாகத்துக்குள் இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதாக மாணவா்களின் பெற்றோா்கள் புகாா் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்றம் சாா்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்றது.

இந்தப் பணி பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே, இந்தப் பணியை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, இந்தப் பள்ளியில் உள்ள தண்ணீா் தொட்டி சேதமடைந்துள்ளது. இந்தத் தண்ணீா் தொட்டியை சீரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com