பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

Published on

தமிழ்நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி திண்டுக்கல்லில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் சாா் ஆட்சியா் சாலையிலுள்ள வணிகவரித் துறை அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வணிக வரி பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் அ.திரவியராஜா, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் பி.பிரேடேரிக் எங்கல்ஸ் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, சோம்நாத் குழு அறிக்கையின் அடிப்படையில் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திவிட்டது. இதேபோல, ஆந்திரத்திலும் உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், கடந்த 2023 ஜூலை மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின் பேசிய தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, புதிய ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக மத்திய அரசு அமைத்துள்ள சோம்நாத் குழு அறிக்கை, ஆந்திராவில் அமல்படுத்தப்பட்ட உத்திரவாத ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றில் தமிழகத்துக்கு சிறந்தது எது என்ற அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தாா். ஆனால், ஓராண்டாகியும் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com