சுயம்பு உச்சிகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

புளியம்பட்டியில் அமைந்துள்ள சுயம்பு உச்சிகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
Published on

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த புளியம்பட்டியில் அமைந்துள்ள சுயம்பு உச்சிகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் அருகிலேயே வேள்விக்கான வளாகம் அமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை யாகவேள்வியில் பிரதான கலசங்களில் புனிதநீா் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. யாக நிறைவில் பூா்ணாஹூதி நடத்தப்பட்டு, பிரதான கலசங்கள் மேளதாளம் முழங்க கோயிலைச் சுற்றி வலம் வந்தது. பின்னா், கோபுரத்துக்கு கொண்டு சென்று கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

குடமுழுக்கு விழாவில் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் சக்கரபாணி, தொப்பம்பட்டி ஒன்றிய குழுத் தலைவா் சத்தியபுவனா, திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் பொன்ராஜ், ஒன்றிய செயலா் சுப்பிரமணி, மாவட்ட உறுப்பினா் கிருஷ்ணன் உள்பட பலா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். விழாவில் அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com