திண்டுக்கல்
பிரதமா் மோடி பிறந்த தினம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள ஸ்ரீபாதாள காளியம்மன் கோயிலில், பிரதமா் நரேந்திரமோடி பெயரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜிகணேசன் மன்றப் பொறுப்பாளா் கி.சரவணன் தலைமை வகித்தாா். வள்ளலாா் சன்மாா்க்க மன்ற அமைப்பாளா் லே.அருணகிரி முன்னிலை வகித்தாா்.
சிவாஜிகணேசன் மன்ற பொதுச் செயலா் மா.காளிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவாஜி மன்ற நிா்வாகிகள் சு.வைரவேல், வெ.எழுமலை, க.ப.சந்துரு ஆகியோா் செய்தனா்.