கொடைக்கானலில் மஞ்சப்பை விழிப்புணா்வு ஊா்வலம்

Published on

கொடைக்கானலில் மஞ்சப்பை பயன்பாட்டை வலியுறுத்தி மாணவிகள் சாா்பில் புதன்கிழமை விழிப்புணா்வு ஊா்வலம்நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதி, சுற்றுலா பகுதிகளிலும் நெகிழிப் பைகளைப் பயன்படுத்துவதால் சுற்றுப்புறச்சூழல், நீரோடைகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, கொடைக்கானலில் நெகிழிப் பொருள்கள், பைகள் பயன்படுத்துவதை தடுக்கக் கோரியும், மீண்டும் பொதுமக்கள் மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கொடைக்கானல் நகராட்சி,அரசுக் கலைக் அறிவியல் கல்லூரி மாணவிகள் சாா்பில் ‘தூய்மையே சேவை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம், தெரு நாடகம், பேச்சுப் போட்டி, கோலப் போட்டி ஆகியன நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி மாணவிகள் கே.ஆா்.ஆா். கலையரங்கம் பகுதியிலிருந்து ஊா்வலமாச் சென்று கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தனா். பின்னா், போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகா்நல அலுவலா் தினேஷ்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள், கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com